இருததலைப்பட்ச வர்த்தக உறவுகள்

 • இருதலைப்பட்டச வர்த்தக ஒப்பந்தங்களின் மதிப்பீடுகள் மற்றும் பேச்சுவார்த்தைகள் என்பவற்றுக்குப் பொறுப்பாக இருப்பதிலும் தற்போதுள்ள இருதலைப்பட்ச வர்த்தக ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவதிலும் DoC தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
 • தற்போது DoC ஆனது இந்திய இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (ISFTA) மற்றும் பாகிஸ்தான் இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (PSFTA) என்பவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு பொறுப்பாக உள்ளது.
 • இந்த ஒப்பந்தங்களின் கீழ் DoC ஆனது மூலசான்றுப் பத்திரங்களுக்கான முகவராகவும் உள்ளது.
 • வர்த்தக மற்றும் பொருளாதார ஒப்பந்தம் மீதான கூட்டு ஆணைக்குழுக்களுக்கான இலங்கையின் கவனப் புள்ளியாக DoCஆனது தொழிற்படுகிறது. இக் கூட்டு ஆணைக்குழுக்களானவை வர்த்தக உறவுகளில் அரசாங்கங்களுக்கிடையிலான ஒரு பொறிமுறையை வழங்குகின்றது. இது சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு இலங்கையின் ஏற்றுமதிகளை விருத்தி செய்வதற்கும் விஸ்தரிப்பதற்குமான மிகவும் உயர்வான நன்மையாக உள்ளது. இந்தக் கூட்டு ஆணைக்குழுக்களின் உருவாக்கக் கட்டத்திலிருந்து அவைகளின் கீழான இருதலைப்பட்ச பேச்சுவார்த்தைகளுக்கும் அவைகளின் வேலைகளை ஒருங்கிணைப்புச் செய்வது தொடர்பாகவும் அவைகளின் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் DoC ஆனது பொறுப்புடையதாக உள்ளது.

பிராந்திய வர்த்தக உறவுகள்

 • DoC ஆனது தேசிய முக்கிய புள்ளியாக புதிய பிராந்திய ஒப்பந்தங்களின் பேச்சுவார்த்தைகளை மதிப்பீடு செய்வதற்கும் பேச்சுவார்த்தைகளைத் தொடருவதற்கும் தற்போதுள்ள பிராந்திய ஒப்பந்தங்களை அமுல்படுத்துவதற்கும் உள்ளது.
 • DoC ஆனது தற்போது தென்னாசிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (SAFTA) தென்னாசிய அதிவிருப்பு ஒப்பந்தம் (SAPTA) ஆசிய பசுபிக் வர்த்தக ஒப்பந்தம் (BIMST - EU மற்றும் IOR RAC என்பவற்றின் தேசிய கவனப் புள்ளியாக தொழிற்படுகிறது.
 • SAFTA / SAPTA, APTA, GSTP மற்றும் GSP என்பவற்றின் கீழான மூல சான்றுப்பத்திரங்களுக்கான சான்றுப்படுத்தல் முகவராகவும் DoC உள்ளது.
 • தென்னாசிய அதிவிருப்பு வர்த்தக ஒப்பந்தம் (SAFTA), இலங்கை இந்திய சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மற்றும் பாகிஸ்தான் இலங்கை ஒப்பந்தம் என்பவற்றின் முதல் வரைபுகள் வர்த்தக திணைக்களத்தாலேயே தயாரிக்கப்பட்டன என்பதைக் குறிப்பிடுவது விடயத்தைப் பொறுத்தளவில் முக்கியமானதாகும்.

பலதலைப்பட்ச வர்த்தக உறவுகள்

 • எல்லா WTO மற்றும் WTO தொடர்புடைய இலங்கை விவகாரங்களுக்கு தேசிய கவனப் புள்ளியாக DoC தொழிற்படுகிறது.
 • 1948 இல் GATTயின் ஸ்தான உறுப்பினராகவும், 1995 இல் WTO வின்  ஸ்தாபன உறுப்பினராகவும் இலங்கை மாறியதிலிருந்து இத் திணைக்களமானது பல தலைப்பட்ச வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் குறிப்பாக உருகுவே சுற்றில் (Uruguay Round) இல் முடிவடைந்தவைகள் தொடர்பாக அதனுடைய தொழிற்பாடுகளை திணைக்களமானது வினைத்திறனான முறையில் செயற்படுத்தியுள்ளது.
 • எல்லாப் பேச்சுவார்த்தை செய்யப்படும் பல தலைப்பட்ச ஒப்பந்தங்களும் WTO வின் கீழ் தற்போது நடைமுறைப்படுத்தப்படுபவைகளுக்கும் மத்திய ஒருங்கிணைப்பு முகவராக இத்திணைக்களம் உள்ளது.
 • அதன் வகிபங்கின் ஒரு பகுதியாக இலங்கையில் WTO ஒப்பந்தங்களை செயற்படுத்துவதனை ஒருங்கிணைப்பதற்காக முக்கிய அமைச்சுக்கள் மற்றும் வர்த்தக சம்மேளனங்களில் இருந்து உறுப்பினர்களைக் கொண்டு 10 உப குழுக்களை உள்ளடக்கிய ஒரு உபகுழு முறைமையை DoC நிறுவியுள்ளது. இந்தக் குழு முறைமையின் சாதனைகளில் ஒன்று என்னவெனில் ஒரு தேசிய சட்டவாக்கத்தை அது வரைவதாகும்.

வெளிநாட்டு வர்த்தகப் பிரதிநிதித்துவம்

 • வெளிநாட்டு வர்த்தகப் பிரதிநிதித்துவம் என்பது அமைச்சின் பார்வையின் கீழ் விழும் ஒரு முக்கிய விடயமாகும். வர்த்தக ஆணையாளரின் 25 வரையிலான வெளிநாட்டு பதவி நிலைகளாவன வர்த்தகத் திணைக்களத்தின் தொழில்வாண்மை மிக்க பணியாளர்களைக் கொண்டு நடத்தப்படுகிறது.

வர்த்தக ஊக்குவிப்பு

This page is under construction

ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு

This page is under construction

நோக்கு

“சர்வதேச வர்த்தக உறவுகளினூடாக மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துதல்.”

செயற்பணி

“மொத்த உற்பத்தி, வருமானம், வேலைவாய்ப்பு மட்டம் என்பவை அதிகரிப்பதன் உடாக இலங்கையின் ஒட்டுமொத்த பொருளாதார அபிவிருத்திக்கு துடிப்புடன் பங்களிப்புச் செய்வதன் ஊடாக வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்குடன் உயர்தர வாழ்வை ஏற்படுத்தும் நோக்குடன் இருதலைப்பட்ச, பிராந்திய பல தலைப்பட்ச மட்டங்களில் அரசின் வர்த்தகக் கொள்கையை பயனுள்ள முறையில் நடைமுறைப்படுத்துவதன் ஊடாக இலங்கையின் வெளிநாட்டு வர்த்தக உறவுகளை விருத்தி செய்து முன்னேற்றுதல்.”

DoC ஆனது வெளிநாட்டுவர்த்தகக் கொள்கையை உருவாக்குவதற்கும் அது தொடர்பான எல்லா ஒருங்கிணைப்புகளுக்கும் இருதலைப்பட்ச பிராந்திய பல தலைப்பட்ச மட்டங்களில் இலங்கையின் வெளிநாட்டு வர்த்தகக் உறவுகளை விருத்தி செய்து ஊக்குவிப்பதை இலக்காகக் கொண்டு விடயங்களை நடைமுறைப்படுத்தவதற்கும் பொறுப்பாக உள்ளது.

கட்டமைப்பு

வர்த்தகத் திணைக்களமானது வர்த்தகப் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் உள்ளதுடன், அதனது பணிகள் பல தலைப்பட்ச வர்த்தக விவகாரங்கள், இருதலைப்பட்ச வர்த்தக உறவுகள் பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஊக்குவிப்பு என்ற பெயருள்ள நான்கு பிரிவுகளின் கீழ் செயற்படுகின்றது.

2017 ஆம் ஆண்டிற்கான பிரதான நடவடிக்கைகள்

 • அமைச்சரவை மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் மட்டத்தில் உலக வர்த்தக நிறுவன அபிலாசைகளில் தொடர்ச்சியாக பங்குபற்றுதல்
 • அபிவிருத்தியடைந்து வரும் நாடு மற்றும் விசேட மற்றும் நலிவடைந்த பொருளாதாரங்கள் (SVE) என்ற வகையில் இலங்கைக்கான விசேட மற்றும் வேறுபட்ட நடைமுறைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள்
 • இலங்கையின் பிரதான வர்த்தக பங்காளிகளின் வர்த்தக கொள்கை மீளாய்வுகளை கண்காணித்தல்
 • தேயிலை, கறுவா மற்றும் நீலக்கல் போன்றவற்றிற்கான புவியியல் சார்ந்த குறிகாட்டிகள் (GI) தொடர்பான பேச்சுவார்த்தைகள்
 • இலங்கையின் வர்த்தக பங்காளிகளின் தரிவு மற்றும் தரிவல்லா நடவடிக்கைகள் குறித்து வர்த்தக சமூகத்திற்கு அறிவூட்டுதல்.
 • உலக வர்த்தக நிறுவனம் (WTO), ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களுக்கான பொருளாதார மற்றும் சமூக ஆணைக்குழு (ESCAP), சர்வதேச வர்த்தக நிலையம் (ITC) மற்றும் ஏனைய நிறுவனங்கள் போன்ற நிறுவனங்களிலிருந்து மனித வள விருத்திக்கான தொழில்நுட்ப உதவுகையினைக் கோருதல்.
 • இலங்கையின் வர்த்தக நடவடிக்கைகளில் பாதிப்பினை ஏற்படுத்தக் கூடிய ஏனைய நாடுகளின்  சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் (FTAs), முன்னுரிமை வர்த்தக உடன்படிக்கைகள் (PTAs) மற்றும் விரிவான பொருளாதார பங்குடமை உடன்படிக்கைகள் (CEPAs).
 • வர்த்தக சமூகத்திற்கான விழிப்புணர்வு பிராச்சார நடவடிக்கைகளினை மேற்கொள்ளுதல்
 • இந்தியா மற்றும் பாகிஸ்தான ஆகிய நாடுகளுடன் CEPA தொடர்பான விடயங்களைக் கையாளுதல்
 • முன்னுரிமை வர்த்தக உடன்படிக்கைகள், சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளிலிருந்து தெரிய வந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் மீளாய்வுக் கூட்டங்களை நடாத்துதல்
 • சீனா, எகிப்து, மலேசியா, ரஷியா, துருக்கி, குவைற் போன்ற நாடுகளுடன் கூட்டு ஆணைக்குழுக்களினை ஏற்படுத்துதல்,
 • ஐக்கிய அமெரிக்காவுடனான வர்த்தக மற்றும் முதலீட்டு சட்டரீதியான  உடன்படிக்கை (TIFA) தொடர்பில் இணைந்து பணியாற்றுதல்
 • ஐரோப்பிய யூனியனின் (EU) ஒத்துழைப்பினைப் பெறுவதற்காக இணைந்து பணியாற்றுதல்
 • உற்பத்திப் பொருட்கள் மற்றும் சந்தைகளின் பல்வகைப்படுத்தலுக்கான சந்தை மதிப்பாய்வுகளினை நடாத்துதல்
 • வர்த்தக சந்தைகளில் இலங்கையின் பங்குபற்றுதலினை ஏற்பாடு செய்தல் / ஒருங்கிணைத்தல்
 • உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் தூதுக்குழுக்களை ஒழுங்கமைத்தல்
 • இலஙகை மற்றும் வெளிநாடுகளிலிருந்து கிடைக்கப்பெறும் வர்த்தக விசாரணைகளுக்கு பதிலளித்தல்.