நூலகம் மற்றும் WTO நிலையத்தை தரிசிப்பதற்காக அல்லது அதனுடைய சேவைகளுக்காக பயன்படுத்துவதற்காக குறிப்பான நிபந்தனைகள் உண்டா?

குறிப்பான நிபந்தனைகள் இல்லை. வருபவர்களும் பயன்படுத்துபவர்களும் தம்மை அடையாளம் காட்ட இருப்பதுடன், ஒரு சிறிய விசாரணைப் படிவத்தை நிரப்பவும் வேண்டும்.

வதிவிட வீசாவுக்கு யார் விண்ணப்பிக்க வேண்டும்?

இலங்கை அரசாங்கத்திடமிருந்து வதிவிட வீசாவிற்கு பின்வருவோர்  தகைமையுடையோராய் உள்ளனர்.

  • இணைப்பு அலுவலகத்தின் வதிவிடப் பிரதிநிதி
  • கிளை அலுவலர்
  • ஒப்பந்த பணியாட்கள், ஏற்றுமதி இறக்குமதி முகவர்கள், விசேடித்த மற்றும் நிபுணர்கள் போன்ற ஏனைய வகையினரும் பொது மதிப்பீட்டு அளவுகோலுக்கு உட்பட்டு ஒவ்வொன்று ஒவ்வொன்றாக நோக்கல் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவர்.

வதிவிட வீசா பெறுவதற்காக சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆதரவு ஆவணங்கள் என்ன?

சமர்ப்பிக்க வேண்டிய ஆதரவு ஆவணங்களின் நிரலை இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். விண்ணப்பதாரி நியாயப்படுத்தல் கடிதத்தையும், பூர்த்தி செய்யப்பட்ட சுயவிபரக் கோவையையும் கல்வித்தகைமைகள் மற்றும் தொழில்வாண்மைச் சாதனைகளின் சான்றுப்பத்திரங்களின் உரிய பிரதிகளுடனும் வதிவிட வீசா படிவம் 1 உடனும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

வதிவிட வீசா சிபார்சுகளுக்காக விண்ணப்பிப்பதற்கு முன்பாக விண்ணப்பதாரி அறிந்து வைத்திருக்க வேண்டிய தகவல்கள் என்ன?

  • வீசாவுக்கான சிபார்சுக்கான வேண்டுகோள்கள் வர்த்தகப் பணிப்பாளர் நாயத்திற்கு முகவரியிடப்பட்டு ஒரு நியாயப்படுதல் கடிதம் பூர்த்தி செய்யப்பட்ட சுயவிபரக் கோவை, கல்வித் தகைமைகள் மற்றும் தொழில்வாண்மை சாதனைகளின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதிகள் என்பன இணைக்கப்பட வேண்டும்.
  • வதிவிட வீசா வேண்டுகோளுக்கான செயன்முறையானது ஏலவே ஆரம்பிக்கப்பட வேண்டும். வதிவிட வீசா புதுப்பித்தல் விடயத்தில் தற்போதைய வீசா முடிவடைவதற்கு ஆகக் குறைந்தது ஒரு மாதத்திற்கு முன்பதாகவே அச் செய்முறை தொடங்கப்பட வேண்டும்.
  • R.V 1  பூர்த்தி செய்யும்பொழுது விண்ணப்பதாரி கேட்கப்பட்டவாறு மேலதிக பத்திரங்களையும் பயன்படுத்தலாம்.
  • ஒவ்வொரு ஆதரவு ஆவணமும் உரிய விடய இலக்கத்தின்படி தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஏதாவது விசேடித்த தனித்துவமான வேண்டுகோள்கள் இருப்பின் அவைகள் ஒவ்வொன்றாக நோக்கல் அடிப்படையில் பரிசீலிக்கப்பட வேண்டும்.

COO வழங்குகைக்கான யின் அட்டவணைப்படுத்தப்பட்ட கால அளவு என்ன?

  • வர்த்தகத் திணைக்களத்தின் கொள்கைக் கிளையானது உரிய முறையில் நிரப்பப்பட்ட சான்றுப் பத்திரங்களை அங்கீகாரத்திற்கான கொடுப்பனவுப் பெறுகைகளுடன் மு.ப. 9.00 - பி.ப. 12.15 மணி வரைக்கும்,  பி.ப. 12.45 - பி.ப. 3.00 வரைக்கும் பெற்றுக்கொள்கின்றது.
  • மூல சான்றுப்பத்திரங்கள் பொதுவான அதே தினத்தில் வழங்கப்படுகின்றது இருந்தபோதும் கொள்கைப் பிரிவுக்கு பி.ப. 2.30 - பி.ப. 3.30 கையளிக்கப்பட்ட சான்றுப்பத்திரங்களானவை அடுத்த நாளே விநியோகிக்கப்படும்.
  • வான்வெளி சரக்கு அனுப்புகைக்காக சமர்ப்பிக்கப்பட்ட சான்றுப்பத்திரங்கள் அதே தினத்தில் விநியோகிக்கப்படும். ஆனாலும் ஏற்றுமதியார்கள் தமது சான்றுப் பத்திரங்களை ஆகக் குறைந்தது பி.ப. 3.30 க்கு முன்பாகவே சமர்ப்பிக்கும்படி அறிவுரை வழங்கப்படுகிறார்கள்.

COO வழங்கப்படுவதற்கான கட்டணங்கள் என்ன?

மூலசான்றுப் பத்திரங்கள் வழங்குவதற்கான கட்டணங்கள் பின்வருமாறு,

  • மூலசான்றுப் பத்திரங்களுக்கான கம்பனிகளின் ஆரம்ப பதிவுக்காக ஒரு கம்பனிக்கு ரூபா 10,000/- (ஒரு தடவைக் கட்டணம்)
  • மூலசான்றுப் பத்திர வழங்குகை ரூபா 1,000/- சான்றுப்பத்திரத்திற்கான வரி
  • மூலசான்றுப்பத்திரத்தை இரத்துச் செய்தல் மற்றும் புதிய சான்றுப் பத்திரத்திற்கு தலா ரூபா 1,000/-
  • நகல் COO வழங்குதல் ரூபா 500 + சான்றுப்பத்திரத்திற்கான வரி
  • COO வின் மேலதிக தகவல்களை வழங்குதல் 500 + சான்றுப்பத்திரத்திற்கான வரி

மூலசான்றுப்பத்திரம் என்றால் என்ன?

மூலசான்றுப் பத்திரம் என்பது ஏற்றுமதி செய்யப்படும் பொருளானது முழுமையாகப் பெறப்பட்டது. உற்பத்தி செய்யப்பட்டது அல்லது மூலநாட்டிலே உற்பத்தி செய்யப்பட்டது என்பதை சான்றுப்படுத்தும் ஆவணமாகும். பொதுவாக இது ஏற்றுமதி ஆவணங்களின் ஒரு உள்ளிணைப் பகுதியாகும். ஒரு மூலசான்றுப் பத்திரமானது ஏற்றுமதிப் பொருட்களின் மூலநாட்டை சுட்டிக்காட்டுவதற்கு மேலாக ஏற்றுமதி செய்யும் நாடுகள் இறக்குமதி செய்யும் நாடுகளிற்கு விசேடித்த கட்டண ஆறுதல்களை ஏற்றுமதி செய்யும் நாடுகள் பெறுவதற்கு வழி செய்கிறது.

இலங்கையிலே GSP “A” படிவ சான்றிதழை சாட்சிப்படுத்துவதற்கான அதிகாரமளிக்கப்பட்ட அரச அமைப்பு எது?

இலங்கையிலே GSP “A” படிவ சான்றிதழை சாட்சிப்படுத்துவதற்கான  அதிகாரமளிக்கப்பட்ட அரச அமைப்பாக இருப்பது, வர்த்தகத் திணைக்களமாகும். 4 ஆம் மாடி “ரக்க்ஷண மந்திரிய” இலக்கம் 21 வக்ஸ்வோல் பாதை, கொழும்பு 02.

GSP “A” படிவ சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான காலவரையறை உண்டா?

ஆம். ஒரு மூலசான்றிதழ் "A" படிவமானது அதிவிருப்பு நடத்துகையை உரிமை கோருவதற்கு தேவையாக இருப்பின் அவர்களின் இறக்குமதி செய்யப்பட்ட சுங்க அதிகாரிகளுக்கு பிரதான சரக்கு பெறுபவரால் வழங்கப்பட்ட திகதியிலிருந்து 10 மாதங்களுக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்

GSP திட்டத்தின் கீழ் நன்மை பெறுவதற்காக எல்லா ஆடை உற்பத்தியார்களுக்குமான ஏதாவது விசேட மூல அளவுகோல் உள்ளதா?

ஆம், மூல GSP விதிகளின் கீழ் ஆடை உற்பத்திகளானவைகள் அதிவிருப்பு நடத்தைக்காக பின்வரும் மூல அளவுகோல்களின் ஒன்றின் கீழ் தகைமை பெற வேண்டும்.

இரட்டை உருமாற்றம்

இரட்டை உருமாற்ற அளவுகோலின் கீழ் ஆடை உற்பத்திகள் நாரிழைக் கட்டத்திலிருந்து  (பின்னல் பொருட்களுக்கு) மற்றும் நூற் கட்டத்திலிருந்து  (இழைக்கும் பொருட்களுக்கும்) இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்டிருக்க வேண்டியிருக்க வேண்டும். ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஆடை உற்பத்திகள் மீது GSP “A” படிவத்திற்காக விண்ணப்பிப்பதற்கு பெறுமதி சேர்ப்பானது ஒரு தகைமையாகக் கருதப்பட மாட்டாது. இவ்விடயத்தில் இறக்குமதி செய்யப்பட்ட நார் இழையங்களைப் பயன்படுத்தி (SAARC) இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் ஆடைகள்  GSP “A” படிவ சான்றிதழைப் பெறுவதற்கு தகைமை பெறமாட்டாது.

மூல சார்க் திரட்டுகை

சார்க் பிராந்தியத்தின் உறுப்பு நாடுகளில் உருவான பண்டங்களையும் பகுதிகளையும் இறக்குமதிகளைப் பயன்படுத்தி இலங்கையில் ஒரு உற்பத்திப் பொருள் உற்பத்தி செய்யப்படுமானால் அது GSP “A” படிவ சான்றிதழுக்கு தகைமை பெறும். அதற்காக ஏற்றுமதியாளர் சார்க் பிராந்திய உறுப்பு நாடுகளிலிருந்து அப்பண்டங்கள் தொகுதிகள் இறக்குமதி செய்யப்பட்டது என்பதற்கான ஒரு GSP “A” படிவ சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

கொடைவழங்குனர் நாட்டு உள்ளடக்க விதி

இவ்விடயத்தில் நார் இழையமானது ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடு ஒன்றிலிருந்தோ அல்லது நோர்வே, சுவிற்சலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருப்பதுடன், முடிவுப் பொருளானது அதே நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் இருப்பின் ஆடைப் பொருட்களுக்கு GSP “A” படிவத்திற்கு அம் முடிவுப்பொருள் தகைமை பெறுகின்றது. ஆனாலும் ஏற்றுமதியாளர் நாரிழையமானது கொடை வழங்கும் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதை உறுதிப்படுத்தும் EUR படிவத்தின் பிரதியொன்றை சமர்ப்பிக்க வேண்டும்.

முழுமையாகப் பெறப்பட்ட உற்பத்திக்காக GSP சான்றிதழ் படிவம் A யின் 8 ஆம் பெட்டியில் ஏதாவது விசேட எழுத்து அச்சடிக்கப்பட உள்ளதா?

ஆம், முழுமையாகப் பெறப்பட்ட பொருளை இனங்காணுவதற்காக சான்றிதழ் அளிக்கப்பட்ட படிவம் A யின் 8ஆம் பெட்டியில் P அச்சடிக்கப்பட வேண்டும். அவுஸ்திரேலியா, நியுசிலாந்து தவிர்ந்த ஏனைய எல்லா அதிவிருப்பு வழங்கும் நாடுகளாலும் இக் குறியீடு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அவுஸ்திரேலியா, நியுசிலாந்தைப் பொறுத்தளவில் முழுமையாகப் பெறப்பட்ட உற்பத்திகளுக்கு இவ் 8 வது பெட்டி வெற்றிடமாக விடப்பட வேண்டும்.

What are the wholly Obtained Products that are considered under GSP?

Products, which have been entirely grown, extracted from the soil or harvested within the exporting country or which have been total absence to used imported input in their production.

GSP யின் கீழே மூல விதிகளைக் கொண்டிருப்பதன் நோக்கம் என்ன?

நன்மை பெறும் நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை இனங்காணுவதற்கும் அந்த நாட்டில் உருவாக்கப்படும் அந்தப் பொருட்கள் மாத்திரமே அதிவிருப்பை பெற்றுக்கொள்கின்றன என்பதை உறுதிப்படுத்துவதற்குமாகவே இவ் மூலவிதிகள் உள்ளன.

GSP யின் கீழான அதிவிருப்பு நடத்தைக்கான பிரதான ஆவணச்சான்று என்ன?

GSP யின் கீழான அதிவிருப்பு நடத்தையைப் பெற்றுக்கொள்வதற்காக வேண்டப்படும் பிரதான ஆவணச்சான்று என்னவெனில், மூல அதிவிருப்பு சான்றுப்பத்திரமாகும். (GSP சான்றுப்படுத்தப்பட்ட “A படிவம்” அதிவிருப்பு நடத்தையை வழங்குவதற்காக அதிவிருப்பு வழங்கும் எல்லா நாடுகளாலும் ஏற்றுக்கொள்ளப்படும் மூலச்சான்று இதுவாகும். அவ்வகையான அதிவிருப்புக்களைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு (GSP A  படிவமானது உரிய ஏற்றுமதியாளரால் நிரப்பப்பட்டு ஏற்றுமதியாளரின் நாட்டு அதிகாரமளிக்கப்பட்ட அரச அமைப்பால் உத்தியோகபூர்வ ரீதியாக சான்றுப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

GSP யின் கீழான சேர்ப்பிடப் பொருளை பூர்த்தி செய்வதற்கு ஏதாவது விசேட நிபந்தனைகள் உள்ளனவா?

ஆம், ஏற்றுமதி செய்யப்படும் உற்பத்தியானது நேரடியாக நன்மை பெறும் நாட்டிலிருந்து அதிவிருப்புக் கொடுக்கும் நாட்டிற்கோ அல்லது அதிவிருப்புக் கொடுக்கும் நாட்டிலிருந்து நன்மை  பெறும் நாட்டிற்கோ நேரடி அனுப்புகைக்கான ஆவண சான்றுகளுடன் ஏற்றுமதி செய்யப்பட வேண்டும். அவ் உற்பத்தியானது மூன்றாம் நாட்டின் பிராந்தியத்தின் ஊடாகக் கடந்து செல்கையில் ஏற்றுமதியாளர் கப்பல்காரருக்கு தவிர்ந்த உரிய அதிவிருப்பளிக்கும் நாட்டின் சுங்க அதிகாரிகளுக்கு சான்றாவணத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

GSP யின் கீழ் எல்லா உற்பத்திகளும் அதிவிருப்புக்குரிய கட்டண நடத்தைக்கு தகுதியுடையனவா?

GSP யின் கீழ் எல்லா உற்பத்திகளும் அதிவிருப்புக்குரிய கட்டண நடத்தைக்கு தகுதியானவைகள் அல்ல. ஏற்றுமதியாளரே அவர் அதில் செயற்படுவதற்கு முன்பாக தனது பொருட்கள் சந்தையின் தனது இலக்கில் அதிவிருப்பு பெறத் தகுதியானவையா என தீர்மானித்துக் கொள்ள வேண்டும். இதனைச் செய்வதற்காக அவர் உரிய அதிவிருப்பு ஒப்பந்தத்தின் கீழ் உற்பத்தி நிரலை அவர் பரிசோதிப்பதுடன், நுட்பமான கட்டண வகைப்பாடு மற்றும் தனது பொருளின் உற்பத்தி விபரிப்புடனும் தொடர்புபடுத்தி அவைகள் அதிவிருப்பு நடத்தைக்கு தகுதியுடையனவா எனத் தீர்மானிக்க வேண்டும்.

GSP (முன்னுரிமைகளின் பொதுவான முறைமை) என்றால் என்ன?

முன்னுரிமைகளின பொதுவான முறைமை (GSP) என்பது, அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் தமது ஏற்றுமதிகளினை விரிவாக்குவதற்கும் அவற்றின் அந்நியச் செலாவணி சம்பாத்தியங்களினை அதிகரிப்பதற்கும் உதவியளிக்கும் நோக்குடன் கைத்தொழில்சார்ந்த நாடுகளினால் எடுக்கப்பட்ட சர்வதேச முயற்சிகளின் பகுதியாக, 1972 இலிருந்து பயனுறுதியாகும் வகையில் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்குச் சாதகமாக கொண்டு வரப்பட்ட ஓர் தரிவு முன்னுரிமை முறைமையாகும்.

Latest News

அனைத்து செய்திகளையும் பார்க்க