நூலக மற்றும் உ.வ.நி உசாத்துணை நிலையமானது 2005 ஒக்டோபரில் உலக வர்த்தக நிறுவனம் (WTO) மற்றும் சர்வதேச வர்த்தக நிலையம் (ITC) என்பவற்றினால் கொழும்பில் தாபிக்கப்பட்டது. இதற்கான அனுசரணை ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சின் வர்த்தக திணைக்களத்தினால் வழங்கப்படுகின்றது. உ.வ.நி உசாத்துணை நிலையமானது நான்கு கணனிகள், இணையத் தொடர்பு மற்றும் பல்வேறு உபகரணங்கள் மற்றும் வெளியீடுகள் என்பவற்றுடன் கூடிய நவீன வசதிகளினைக் கொண்டுள்ளது. இந்த நிலையமானது சிறந்த புரிந்துணர்வு மற்றும் பலதரப்பு வர்த்தக முறைமை (MTS) மற்றும் அதன் அமுலாக்கங்கள் என்பவற்றினை எதிர்பார்க்கும் ஒவ்வொருவருக்குமாக திறக்கப்படவுள்ளது.
உலக வர்த்தக நிறுவனம் மற்றும் பல் தரப்பு வர்த்தக முறைமை என்பவற்றின் அனைத்து விடயங்களினையும் உள்ளடக்குகின்ற உவநி உசாத்துணை நிலையத்திற்கு மேலதிகமாக, உவநி உசாத்துணை நிலையத்தின் வலையமைப்பின் ஒரு பகுதியாக 160 உசாத்துணை நிலையங்கள் உலகெங்கும் தாபிக்கப்பட்டுள்ளன. ஆர்வமுடைய நிபுணர்கள் உலக வர்த்தக உடன்படிக்கைகளில் ஆகக்குறைந்தது 4 இனையேனும் (TBT, SPS, சேவைகள், புலமைச் சொத்துக்கள்) உருவாக்குவதற்கும் ஒவ்வொரு உலக வர்த்தக நிறுவனத்தின் உறுப்பினருக்கும் தேவைப்படுகின்ற தேசிய விசாரணைப் புள்ளிகள் தொடர்பிலும் ஆலோசனை செய்ய முடியும்.
உலக வர்த்தக உசாத்துணை நிலையத்தினால் வழங்கப்படும் அனைத்து சேவைகளினையும் வழங்குவதற்கான அணுகுமுறையானது இலவசமாக வழங்கப்படுகின்றது. வெளியக பயன்பாட்டாளர்கள் முதன்மை அலுவலகத்திலுள்ள விசாரணைப் படிவமொன்றினை நிரப்பிக் கொடுப்பதன் மூலமோ அல்லது தொலைபேசி / மின்னஞ்சல் மூலமாக தமது தொடர்பு விபரங்களை வழங்குவதன் மூலமோ தம்மை அடையாளங் காண்பதற்கான கோரிக்கையினை விடுக்கின்றனர்.