கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் பார்வையின் கீழ் நேரடியாக வரும் வெளிநாட்டுக் கம்பனிகளின் இணைப்பு அலுவலகங்கள், கிளை அலுவலகங்கள், வர்த்தக மற்றும் வியாபார செயற்பாடுகளில் வேலைக்கமர்த்தப்பட்டு வெளிநாடுகளில் வதிபவர்களுக்கான வதிவிட சிபார்சுகளை வழங்கும் அதிகாரமளிக்கப்பட்ட முகவராக DOC செயற்படுகிறது.

வெளிநாட்டவர்களை வேலைக்கமர்த்தும் ஒரு கம்பனி அல்லது நிறுவனம் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்திடம் அவ் வெளிநாட்டவரின் வருகைக்கு முன்பதாக அவரின் பெயர், தேசிய இனம், இலங்கையில் தங்கும் கால அளவு, அவரது ஒப்படையின் இயல்பு போன்ற விபரங்களை அமைச்சின் சிபார்சுடன் கொடுத்து வேண்டுகோள் செய்ய வேண்டும். DOC  வதிவிட வீசா வழங்கும் செயன்முறையில் இலங்கையில் வெளிநாட்டு பணியாளரின் பிரசன்னம் கொடுக்கப்பட்ட காரணங்களின் பிரகாரம் அத்தியாவசியமானது என்பதை உறுதிப்படுத்துவதில் சிரத்தையான கவனத்தை செலுத்துவதுடன், அவ்வாறு செய்வதானது எச் சூழ்நிலையிலும் இலங்கையர்களுக்குரிய வேலைவாய்ப்பு சந்தர்ப்பங்களைக் குறைக்காது என்பதிலும் கவனம் செலுத்தும். அதாவது வதிவிடவீசா விண்ணப்பதாரியின் பிரசன்னமானது தேசிய பொருளாதார நோக்கில் நாட்டிற்கு நன்மையானது எனவும் வேலைவழங்குனர் ஒரு பொருத்தமான உள்ளுர் பிரதியீட்டை இனங்காணுவதில் நியாயமான போதியளவு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் என்பதிலும் கவனம் செலுத்தும்.

மேற்படி, தேவைப்பாட்டின் பிரகாரம் ஒரு வதிவிட வீசா முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பமானது மூன்று வாரத்திற்கு முன்பதாகவே வர்த்தகப் பணிப்பாளர் நாயகத்திடம் கிடைக்கச் செய்ய வேண்டும்.

Latest News

The Embassy of Sri Lanka in Viet Nam organizes a Webinar on Bilateral Investment Promotion between Sri Lanka and Viet Nam

The Embassy of Sri Lanka in Viet Nam...

20 செப்டம்பர் 2023

Over 40 women stranded in the Emirates without...

08 செப்டம்பர் 2023
அனைத்து செய்திகளையும் பார்க்க