இலங்கை ஒரு நன்மை பெறுனராக அல்லது ஒரு தரப்பாக இருக்கும் எல்லா  GSP திட்டங்கள் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் தனிவிருப்பு வர்த்தக ஒப்பந்தங்கள் என்பவற்றின் கீழ் மூலசான்றுப் பத்திரங்களை COOs வழங்குவதற்கான  பொறுப்பை வர்த்தகத் திணைக்களம் கொண்டுள்ளது. COO சான்றுப்பத்திரத்தை பெற்றுக்கொண்டதுடன், ஒரு உற்பத்தியானது மூல ஒப்பந்த விதிகளை ஒத்திருக்கின்றது. COOவின் ஒரு சான்று வழங்கப்பட்டதுடன் அவ் உற்பத்தியானது அச் சந்தைகளுக்குள் ஒன்றில் தீர்வையற்றதாகவோ அல்லது குறைக்கப்பட்ட தீர்வைகளின் கீழோ அச் சந்தைகளுக்குள் நுழையும்.

சராசரியாக, வர்த்தகத் திணைக்களம், ஒருநாளைக்கு 500 சான்றுப்பத்திரங்களை வழங்குகிறது.

ஏற்றுமதி ஆவணப்படுத்தல் செயன்முறையை துரிதமாகப் பூர்த்தி செய்வதை வசதிப்படுத்தும் நோக்குடன் DOA ஆனது பொதுவாக COOக்களை ஒரு நாளுக்குள்ளேயே வழங்குகின்றது.

இந்தக் கடுமையான பணியைச் செயற்படுத்தும் முகமாக திணைக்களத்தின் உள்ள கட்டுப்பாட்டு முறைமையானது மேலதிக செலவு எதுவும் இல்லாமல் ஒழுங்கமைக்கப்பட்டது. இவ்வாறு வழங்கப்பட்ட COO களின் 75% மேலானவைகள் EU GSP திட்டத்தின் கீழ் வந்ததுடன், பிரதானமாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஆடை உற்பத்திகள் ஏற்றுமதியாகவும் இருந்தது.

உயர்ந்த உற்சாகமான அதிகாரிகள் குழுவொன்று COO பிரிவில் முழு நேரமாக இதற்காக ஒதுக்கப்பட்டு இருப்பதுடன், முன் நியமனங்கள் எதுவுமில்லாமல் அலுவலக நேரங்களில் எந்த நேரத்திலும் ஆலோசனைகளையும் மேலதிக தகவல்களையும் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது. இவ் வருடத்தின் கடந்த 9 மாதங்களின் பொழுது இவ்வாறு ஒதுக்கப்பட்ட அதிகாரிகளால் சராசரியாக ஆயிரம் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

Latest News

அனைத்து செய்திகளையும் பார்க்க