Department of Commerce Sri Lanka

Sinhala (Sri Lanka)English (United Kingdom)
sinhala_font  tamil_font
  • எழுத்துரு அளவினை அதிகரிக்க
  • பொதுஇருப்பு எழுத்துரு அளவு
  • எழுத்துரு அளவினைக் குறைக்க
முதற்பக்கம் செய்தி அறை DOC அறிவிப்புக்கள்

DOC அறிவிப்புக்கள்

உயர் விருப்புக்களின் பொதுவாக்கப்பட்ட முறைமையின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கான மூலச்சட்டங்ளை மீளமைக்கும் ஒரு ஒழுங்குவிதியானது 2010 நவம்பர் 18 ஆம் திகதி . ஐரோப்பிய ஆணைக்குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவ் ஒழுங்குவிதியானது ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகை வருப்பு வர்த்தக ஏற்பாட்டினை சென்றடைய விரும்பும் அபிவிருத்தயைடைந்து வரும் நாடுகளுக்கான விதிளையும் செயல்முறைகளையும் தளர்த்துவதுடன் இலகுபடுத்துவதுடன் அதேவேளையில் மோசடியைத் தடுப்பதற்காக அத்தியாவசியமான கட்டுப்பாடுகள் உரிய வகையில் இருப்பதையும் உறுதிப்படுத்துகிறது. இப் புதிய மூல விதிகளானவை 2011 சனவரி 01 திகதியிலிருந்து அமுலுக்குவரும்.

எல்லா ஏற்றுமதியாளர்களுக்கும்

GSP சான்றுப்பத்திரத்தின் பிரச்சினைகள்

  • ஏற்றுமதியாளர்களுக்கு மிகவும் வினைத்திறன் வாய்ந்ததும் விரைவானதுமான சேவையை வழங்குவதற்காக வர்த்தகத் திணைக்களமானது 2011.01.01 அன்றான உரிய மூல மிகை விருப்பு விதிகளை பூர்த்திசெய்யும் ஏற்றுமதிகளுக்காக மூல சான்றுப்பத்திரங்களின் பிரச்சனைகளுக்கான இலகுபடுத்தப்பட்ட செயன்முறைளை அறிமுகம் செய்யவுள்ளது.
  • •    முன்னைய ஏற்பாட்டில் இருந்ததுபோன்றே, ஏற்றுமதியாளர்களே ஒழுங்குவிதிகளில் உள்ளடக்கப்பட்டுள்ள விதிகளுக்கு அமைவாக  மூல சான்றுப்பத்திரங்களின் படிவம் A யினைப் பூர்த்திசெய்வதற்கான பொறுப்பு ஏற்றுமதியாளர்களுக்கே உரியது. படிவம் A யானது பிரதான உத்தயோகபூர்வ ஆவணமாகும். GSP நன்மைகளை ஏற்றுமதியாளர்களின் பண்டங்களுக்கு வழங்குவதற்கு ஐரோப்பிய ஆணைக்குழுச் சுங்க அதிகாரிகள் அதிலேயே நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.
  • ஏற்றுமதியாளர்கள் தாம் வழங்கிய தகவல்களுக்கு பொறுப்புச் சொல்லவும் வேண்டியவர்களாக உள்ளதுடன், வேண்டப்படும்பொழுது திணைக்கள அதிகாரிகளுக்கு ஒழுங்குவிதிகளின் பிரகாரமான மேலதிக வேறேதும் தகவல்களையும் வழங்குவதற்கு தயாராக இருக்கவேண்டும்.
  • சான்றுப்பத்திரங்கள் விநியோகிக்கப்படும் மூலவிதிகள் பற்றிய நல்லறிவு ஏற்றுமதியாளர்களுக்கு இருக்க வேண்டும். 2011.01.01 புதிய ஒழுங்குவிதிகளாவைகள் பின்வரும் இணையத்தளங்களில் கிடைக்கக்கூடியதாக உள்ளது.
  • இணையத்தளமுகவரி
    http://ec.europa.eu/taxation_customs/customs/customs/_duites/rules_origin/preferential/article_777_en.htm
  • புதிய மூலவிதிகளான வேறு ஏதாவது விளக்கங்கள் தேவைப்படின் திணைக்கள அதிகாரிகளை ஏற்றுமதியாளர்கள் விருப்பப்படி கலந்தாலோசித்துக் கொள்ளலாம்.
  • வர்த்தகத் திணைக்களத்தால் சான்றுப்படுத்தப்பட்ட திரைக்கூற்றுக்கள் மற்றும் சத்தியக்கடதாசிகளை பொருத்தமான இடங்களில் பெற்றுக்கொள்ளும்படி ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்க்கப்படுகிறார்கள். இவைகள் ஒரு வருடத்திற்கு செல்லக்கூடியதாக இருப்பதுடன் இறக்குமதி செய்யப்படும் அல்லது உள்ளூரில் கொள்வனவு செய்யப்படும் துணிகள் / மூலப்பொருட்களைப் பொறுத்தவரையில் சம்பந்தப்பட்ட உற்பத்தியின் உள்ளீடு தொடர்பாக பெரிய மாற்றங்கள் செய்யுமிடத்து இது மீளமைக்கப்பட வேண்டும். அவ்வாறு தேவைப்படும்பொழுது வர்த்தகத் திணைக்களமானது இந்த பதிவைப் பரீட்சித்துக் கொள்ளும். இனிமேல் விண்ணப்பத்துடன் CusDecs இன் ஒரு பிரதியை வழங்க வேண்டிய தேவையிருக்காது. இறக்குமதி, ஏற்றுமதி ஆவணப்படுத்தல் நடைமுறையை இலகுபடுத்துவதற்காக முதலீட்டுச் சபையில் இருந்து இந்த தேவைப்பாடானது நீக்கப்பட்டுள்ளது. இப்பொழுது இந்த ஆவணத்தின் இரண்டு பிரதிகள் மாத்திரமே வழங்கப்படுகிறது. ஆனாலும் விண்ணப்பத்தின் அலுவலகப் பிரதியின் 4வது கூற்றில் தகவல்கள் உள்ளடக்கப்பட வேண்டும்.
    1. CusDec இலக்கம்
    2. பிரகடனம் (CusDecs L பெட்டி இலக்கத்தில் உள்ளவாறு)
    3. அலுவலகக் குறி பெட்டி 29 இல் உள்ளவாறு)
    4. வருடம்
  • CusDec வேண்டப்படும் உணவுப்பண்டங்கள் மற்றும் மூலிகைத் தேயிலை, துவிச்சக்கரவண்டிகள், மற்றும் அதன் உதிரிப்பாகங்கள் என்பவை கலந்த செயற்பிட பொருள்களை ஏற்றுமதி செய்யும் ஏற்றுமதியார்களுக்கு இந்த விதிவிலக்கு பொருத்தமாக இராது என்பதை தயவுசெய்து கவனிக்கவும்.
  • வழங்கப்பட்ட சான்றுப்பத்திரங்களின் அலுவலகப்பிரதியை மாத்திரமே டொக் வைத்திருக்கும்.
  • மிகை விருப்பளிக்கும் ஒரு நாட்டிடமிருந்து சரிபார்த்தலுக்கான ஒரு வேண்டுகோள் வரும்பொழுது  சான்றுப்பத்திரங்கள் வழங்கப்பட்ட திகதியிலிருந்து 03 ஆண்டு காலப்பகுதிக்குமான விடுவிப்பிற்கு பின்னான சரிபார்ப்புக்களுக்காக, வர்த்தகத் திணைக்களமானது பொருத்தமானவைகளாக கருதப்படும் ஏதாவது ஆவணச் சான்றுக்காகவோ அல்லது ஏதாவது பரிசோதிப்புக்களை மேற்கொள்வதற்காகவோ அளிக்கலாம். இந்த GSP ஒழுங்குவிதிகளி்ன் தேவையினை  முன்னிட்டு சான்றுபத்திரங்கள் விநியோகிக்கப்பட்டது மீதான ஆவணச் சான்றுகள் அனைத்தையும் 31/2 வருடங்களுக்கு தமது பாதுகாப்பில் வைத்திருக்கும்படி ஏற்றுமதியார்கள் எதிர்பார்க்கப்படுகிறார்கள்.
  • உற்பத்தியின் மூல நிலைக்கான விடுவிப்பி்ற்கு பின்னான சரிபார்த்தலுக்கான தேவையான ஆவணங்கள் மற்றும் தகவல்களை ஏற்றுமதியாளர்களால் வர்த்தக திணைக்களத்திற்கு கிடைக்கச் செய்யப்படாது போகின் அதனை உரிய இறக்குமதி செய்யும் நாட்டிற்கு திணைக்களம் அறிவிக்கும்.
  • இவ் அறிவுறுத்தல்கள் குறித்த மேலதிக விளக்கங்களும் உங்களுக்குத் தேவைப்படின் வர்த்தகத் திணைக்களத்தை தொடர்புகொள்ள தயவு செய்து தயங்க வேண்டாம்.
வெள்ளிக்கிழமை, 13 ஜனவரி 2017 08:24 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது  
Exporter
Newsletter
Download

செய்திகளும் நிகழ்ச்சிகளும்

  • 1
  • 2
  • 3
  • 4
Seminar on Trade in Services Seminar on Trade in Services இந்த உள்ளடக்கம் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளதுThe Department of Commerce in collaboration with the Band...
Seminar on Trade Policy Seminar on Trade Policy இந்த உள்ளடக்கம் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளதுThe Department of Commerce in cooperation with the U.S. D...
Regional Workshop on “Trade-Led Development in the Multilateral Trading System” Regional Workshop on “Trade-Led Development in the Multilateral Trading System” இந்த உள்ளடக்கம் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளதுThe Department of Commerce together with Sri Lanka Embass...
Sri Lanka Hosts Commonwealth Policymakers Workshop on Post-Nairobi WTO Issues Sri Lanka Hosts Commonwealth Policymakers Workshop on Post-Nairobi WTO Issues இந்த உள்ளடக்கம் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளதுAs many as sixty participants, including senior officials...

முக்கியமான இணையதளங்கள்