Brief Report on “Sri Lanka Beyond Your Dreams” held on 08th March 2024, Hilton Hotel, Dubai, UAE
Towards a digital Sri Lanka: Sri Lankan Embassy in Washington DC hosts an interactive discussion
Sri Lanka Tourism shines bright in Tunisia
Sri Lanka Thailand Free Trade Agreement (SLTFTA )
Sri Lanka Tourism Promotion event in Alexandria Governorate
SRI LANKA SHINES BRIGHT AT VIETNAM EXPO 2023: INNOVATIVE APPROACH FOR FUTURE COLLABORATION
The Embassy of Sri Lanka in Viet Nam participates in the International Food Festival 2023
Products of Sri Lankan SMEs enthrall and fascinate Vietnamese in Ha Noi

Latest News

அனைத்து செய்திகளையும் பார்க்க

நோக்கு

“சர்வதேச வர்த்தக உறவுகளினூடாக மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துதல்.”

செயற்பணி

“மொத்த உற்பத்தி, வருமானம், வேலைவாய்ப்பு மட்டம் என்பவை அதிகரிப்பதன் உடாக இலங்கையின் ஒட்டுமொத்த பொருளாதார அபிவிருத்திக்கு துடிப்புடன் பங்களிப்புச் செய்வதன் ஊடாக வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்குடன் உயர்தர வாழ்வை ஏற்படுத்தும் நோக்குடன் இருதலைப்பட்ச, பிராந்திய பல தலைப்பட்ச மட்டங்களில் அரசின் வர்த்தகக் கொள்கையை பயனுள்ள முறையில் நடைமுறைப்படுத்துவதன் ஊடாக இலங்கையின் வெளிநாட்டு வர்த்தக உறவுகளை விருத்தி செய்து முன்னேற்றுதல்.”

வர்த்தக திணைக்களமானது இலங்கைக்கு முக்கியத்துவம் மிகுந்த 25 நாடுகளில் 30 பிரதிநிதிகளினைக் கொண்டுள்ளது. அவர்கள் அத்தகைய முக்கியத்துவம் நிறைந்த சந்தைகளில் இலங்கையின் வர்த்தக மற்றும் பொருளாதார நலன்களை ஊக்குவித்தல் மற்றும் விருத்தி செய்வதில் அக்கறையுடன் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் சேவையானது குறிப்பாக இலங்கையின் வர்த்தக சமூகத்திற்கு கிடைக்கக்கூடியதாகவுள்ளது.

வெளிநாடுகளிலுள்ள வர்த்தக உத்தியோகத்தர்களினால் நிறைவேற்றப்பட்ட பிரதானதொழிற்பாடுகள் பின்வருவனவற்றினை உள்ளடக்குகின்றன.

  • இலங்கை உற்பத்திகளுக்கான ஏற்றுமதி வாய்ப்புக்களை இனங்காண்பதற்கான சந்தை மதிப்பாய்வுகள் / நுண்ணய்வுகளை தொகுத்தல்
  • உதவி வழங்கும் நாட்டின் வர்த்தக கொள்கை மாற்றங்கள் விசேடமாக வரி மற்றும் வரியல்லா நடவடிக்கைகள் தொடர்பில் கண்காணித்தலும் அறிக்கையிடலும்.
  • முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச வர்த்தக கண்காட்சிகள் / நிகழ்வுகளில் இலங்கையின் பங்குபற்றுதலினை ஏற்பாடு செய்தல். இப்பணியானது இலங்கையின் ஏற்றுமதிகளை மேம்படுத்துவதில் அதிக பயனுறுதி வாய்ந்த நடவடிக்கைகளில் ஒன்றாக கருதப்படுகின்றது.  
  • இலங்கையில் நடைபெறும் கண்காட்சிகள் / நிகழ்வுகளில் வெளிநாட்டு வியாபார தூதுக்குழுக்களை பங்குபற்றுவதற்கு ஏற்பாடு செய்தல்
  • அனுசரணை வழங்கும் நாடுகளில் இலங்கையின் (தனி - நாடு) விசேட ஊக்குவிப்பு பிரச்சாரங்களை அரங்கேற்றுதல்.
  • வர்த்தக, முதலீடு மற்றும் சுற்றுலா தூதுக்குழுக்கள் இலங்கைக்கு விஜயம் செய்வதற்கான எற்பாடுகளையும் வியாபார வாய்ப்புக்களை கண்டறிவதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொள்ளுதல்.
  • வியாபார வாய்ப்புக்களை கண்டறிவதற்கு இலங்கையிலிருந்தும் இலங்கைக்குமான தனிநபர் வியாபார விஜயங்களை ஏற்பாடு செய்தல்
  • அநுசரணை நாடுகளிலுள்ள வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா துறை ஆகியவற்றுடன் தொடர்புடைய அதிகாரிகளுடன் வலையமைப்பினை ஏற்படுத்துதல்  மற்றும் இலங்கையின் வர்த்தக மற்றும் பொருளாதார நலன்களுடன் தொடர்புடைய பிரச்சனைகள் மற்றும் விடயங்கள் தொடர்பில் பல்வேறுபட்ட அரசாங்க மற்றும் சர்வதேச நிறுவனங்களினை பிரதிநிதித்துவப்படுத்துதல்.
  • இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய விசாரணைகளை வழங்குதல், வெளிநாட்டு வியாபாரம் தொடர்பான விஜயங்கள் / கூட்டங்களை நடாத்துதல், தொழில்நுட்ப உதவுகையினை வழங்குதல், வர்த்தகம் தொடர்பான பிணக்குகளை தீர்த்தல் போன்றன.

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் பார்வையின் கீழ் நேரடியாக வரும் வெளிநாட்டுக் கம்பனிகளின் இணைப்பு அலுவலகங்கள், கிளை அலுவலகங்கள், வர்த்தக மற்றும் வியாபார செயற்பாடுகளில் வேலைக்கமர்த்தப்பட்டு வெளிநாடுகளில் வதிபவர்களுக்கான வதிவிட சிபார்சுகளை வழங்கும் அதிகாரமளிக்கப்பட்ட முகவராக DOC செயற்படுகிறது.

வெளிநாட்டவர்களை வேலைக்கமர்த்தும் ஒரு கம்பனி அல்லது நிறுவனம் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்திடம் அவ் வெளிநாட்டவரின் வருகைக்கு முன்பதாக அவரின் பெயர், தேசிய இனம், இலங்கையில் தங்கும் கால அளவு, அவரது ஒப்படையின் இயல்பு போன்ற விபரங்களை அமைச்சின் சிபார்சுடன் கொடுத்து வேண்டுகோள் செய்ய வேண்டும். DOC  வதிவிட வீசா வழங்கும் செயன்முறையில் இலங்கையில் வெளிநாட்டு பணியாளரின் பிரசன்னம் கொடுக்கப்பட்ட காரணங்களின் பிரகாரம் அத்தியாவசியமானது என்பதை உறுதிப்படுத்துவதில் சிரத்தையான கவனத்தை செலுத்துவதுடன், அவ்வாறு செய்வதானது எச் சூழ்நிலையிலும் இலங்கையர்களுக்குரிய வேலைவாய்ப்பு சந்தர்ப்பங்களைக் குறைக்காது என்பதிலும் கவனம் செலுத்தும். அதாவது வதிவிடவீசா விண்ணப்பதாரியின் பிரசன்னமானது தேசிய பொருளாதார நோக்கில் நாட்டிற்கு நன்மையானது எனவும் வேலைவழங்குனர் ஒரு பொருத்தமான உள்ளுர் பிரதியீட்டை இனங்காணுவதில் நியாயமான போதியளவு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் என்பதிலும் கவனம் செலுத்தும்.

மேற்படி, தேவைப்பாட்டின் பிரகாரம் ஒரு வதிவிட வீசா முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பமானது மூன்று வாரத்திற்கு முன்பதாகவே வர்த்தகப் பணிப்பாளர் நாயகத்திடம் கிடைக்கச் செய்ய வேண்டும்.

இலங்கை ஒரு நன்மை பெறுனராக அல்லது ஒரு தரப்பாக இருக்கும் எல்லா  GSP திட்டங்கள் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் தனிவிருப்பு வர்த்தக ஒப்பந்தங்கள் என்பவற்றின் கீழ் மூலசான்றுப் பத்திரங்களை COOs வழங்குவதற்கான  பொறுப்பை வர்த்தகத் திணைக்களம் கொண்டுள்ளது. COO சான்றுப்பத்திரத்தை பெற்றுக்கொண்டதுடன், ஒரு உற்பத்தியானது மூல ஒப்பந்த விதிகளை ஒத்திருக்கின்றது. COOவின் ஒரு சான்று வழங்கப்பட்டதுடன் அவ் உற்பத்தியானது அச் சந்தைகளுக்குள் ஒன்றில் தீர்வையற்றதாகவோ அல்லது குறைக்கப்பட்ட தீர்வைகளின் கீழோ அச் சந்தைகளுக்குள் நுழையும்.

சராசரியாக, வர்த்தகத் திணைக்களம், ஒருநாளைக்கு 500 சான்றுப்பத்திரங்களை வழங்குகிறது.

ஏற்றுமதி ஆவணப்படுத்தல் செயன்முறையை துரிதமாகப் பூர்த்தி செய்வதை வசதிப்படுத்தும் நோக்குடன் DOA ஆனது பொதுவாக COOக்களை ஒரு நாளுக்குள்ளேயே வழங்குகின்றது.

இந்தக் கடுமையான பணியைச் செயற்படுத்தும் முகமாக திணைக்களத்தின் உள்ள கட்டுப்பாட்டு முறைமையானது மேலதிக செலவு எதுவும் இல்லாமல் ஒழுங்கமைக்கப்பட்டது. இவ்வாறு வழங்கப்பட்ட COO களின் 75% மேலானவைகள் EU GSP திட்டத்தின் கீழ் வந்ததுடன், பிரதானமாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஆடை உற்பத்திகள் ஏற்றுமதியாகவும் இருந்தது.

உயர்ந்த உற்சாகமான அதிகாரிகள் குழுவொன்று COO பிரிவில் முழு நேரமாக இதற்காக ஒதுக்கப்பட்டு இருப்பதுடன், முன் நியமனங்கள் எதுவுமில்லாமல் அலுவலக நேரங்களில் எந்த நேரத்திலும் ஆலோசனைகளையும் மேலதிக தகவல்களையும் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது. இவ் வருடத்தின் கடந்த 9 மாதங்களின் பொழுது இவ்வாறு ஒதுக்கப்பட்ட அதிகாரிகளால் சராசரியாக ஆயிரம் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

The DoC also functions as the focal point in Sri Lanka for joint commissions on trade and economic co-operation which have been established under trade agreements. These joint commissions provide a mechanism for inter-governmental cooperation in trade relations which is extremely beneficial for the development and expansion of Sri Lanka’s exports to the countries concerned. The DoC is responsible for bilateral trade negotiations under these joint commissions from the stage of their formulation, and with respect to coordination of their work and implementation of their decisions.

The scope of these Joint Commissions is comprehensive ranging from trade, banking, and shipping to co-operation in education, science and employment. Activities undertaken in this context apart from contributing to the promotion of Sri Lanka’s trade are intended to foster mutual understanding and co-operation between participating countries and their respective public and private sector agencies.

The Department of Commerce is responsible for co-ordination and conduct of the following Joint Commissions/Committees, which are held at ministerial level.

இலங்கை - பங்களாதேஷ்

இலங்கை - பங்களாதேஷிற்க்கான பொருளாதார ஒத்துழைப்புக்கான கூட்டு ஆணைக்குழுவின் இறுதி கூட்டமானது 1993 மார்ச் 30 - 31 வரையில் கொழும்பில் நடாத்தப்பட்டது. அந்த அமர்வில், கைத்தொழில், விவசாயம் மற்றும் சிவில் விமான சேவை, கலாச்சார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உள்ளடங்கலான இருதரப்பு வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான பல்வேறு துறைகளின் சாத்தியப்பாடுக்ள குறித்து கலந்துரையாடப்பட்டன.

மூன்றாம் அமர்வின பெறுபேறாக, சிறிலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் பங்களாதேஷ், பிமான் என்பன தலைநகரங்களுக்கிடையிலான விமான இணைப்பினை தாபிப்பதற்கான வர்த்தகசார் உடன்படிக்கையினை நிறைவு செய்துள்ளன.

4 ஆவது அமர்வானது டாக்காவில் இடம்பெறவுள்ளது. எவ்வாறாயினும், பங்களாதேஷில் இடம்பெற்று வரும் அரசியல் குழப்ப நிலை காரணமாகவும், அவ்வாறே  SAPTA, BIMST-EC மற்றும் பாங்கொக் உடன்படிக்கைகளினை தொழிற்படுத்துதல், கூட்டுப் பொருளாதார ஆணைக்குழுவின் நான்காவது அமர்வு என்பவற்றினைத் தொழிற்படுத்துதல் என்பனவற்றின் காரணமாகவும் கூட்டுப் பொருளாதார ஆணைக்குழுவின் நான்காவது அமர்வு இதுவரையில் இடம்பெறவில்லை.

இலங்கை - மாலைதீவு

இலங்கை - மாலைதீவு கூட்டு ஆணைக்குழுவின் 4 அவது அமர்வு 1995 பெப்ரவரி 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் கொழும்பில் நடாத்தப்பட்டது. கூட்டத்தின் போது இரண்டு தரப்புக்களும் தற்போதைய இருதரப்பு பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்களினை மீளாய்வு செய்ததுடன் இரண்டு நாடுகளுக்குமிடையிலான பொருளாதார வளர்ச்சி குறித்து தமது திருப்தியினைத் தெரிவித்துக் கொண்டன. 4 அவது அமர்வினைத் தொடர்ந்து, இலங்கை தொழில் திணைக்களமானது பல மாலைதீவு அரசாங்கத்தின் அதிகாரிகளுக்கு  அதன் கோரிக்கையின் அடிப்படையில் பயிற்சியளித்துள்ளது.

இலங்கைக்கும் மாலைதீவுக்குமிடையில் கைச்சாத்திடப்பட்ட வர்த்தக உடன்படிக்கையின் முக்கியத்துவம் SAPTA இனால் மேம்பட்டுள்ளது.

இலங்கை - சீனா

இலங்கை  - சீன கூட்டு ஆணைக் குழுவானது வர்த்தக திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்ட இருதரப்பு ஏற்பாடுகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

கூட்டு ஆணைக்குழுவின் இரண்டாவது அமர்வு 1996 மார்ச்சில் பெஜ்ஜிங்கில் நடாத்தப்பட்டது. இலங்கை துதுக்குழுவிற்கு கௌரவ உள்நாட்டு மற்றும் சர்வதேச வர்த்தகம் மற்றும் உணவு அமைச்சரும் சீனத் தூதுக்குழுவிற்கு வெளிநாட்டு வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு அமைச்சர் எச்.ஈ.அம்மணி வு. ஜீ அவர்களும் தலைமை தாங்கினார்கள்.

அதனைத்தொடர்ந்து, இந்த கூட்டு ஆணைக்குழுவின் கூட்டமானது, சீனப் பிரதம மந்திரி அதிமேதகு திரு. சூ ரொங்ஜி அவர்கள் 2001 மே இல் இலங்கைக்கு விஜயம் செய்த போது இடம் பெற்றுள்ளதுடன் இதில் கூட்டு ஆணைக்குழு தொடர்பான சில விடயங்கள் குறித்து ஆராயப்பட்டன.இலங்கையானது சீனாவுடன் பல நுற்றாண்டு காலங்களாக  வர்த்தக உறவுகளைப் பேணி வருகின்றது. 1952 இல் வர்த்தக உடன்படிக்கை மற்றும் இறப்பர் மற்றும் அரிசியுடன் தொடர்புடைய ஐந்து வருட  வர்த்தக உடன்படிக்கை ஆகியவற்றில் கைச்சாத்திட்டதனைத் தொடர்ந்து இரண்டு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக உறவுகளில் புதியதொரு அத்தியாயம் 1952 இல் இருந்து ஆரம்பமானது. 1982 வரையில், இரண்டு நாடுகளுக்குமிடையலான வர்த்தகத்தின் கீழ்  சட்ட ரீதியான அந்தஸ்தினைப் பெறும் வகையில் வர்த்தக மற்றும் கொடுப்பனவு உடன்படிக்கைகள் தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடாத்தப்பட்டன. இறுதிக் குறிப்புக்கள், அரிசி மற்றும் இறப்பர் பண்டமாற்றுக்காக மேற்கொள்ளப்பட்ட இத்தகைய உடன்படிக்கைகளின் கீழ் கையொப்பமிடப்பட்டன. வெளிப்படுத்தல் கணக்குகளின் இரண்டு தொகுப்புக்களும் பண்டமாற்றுக் கொடுக்கல் வாங்கல்களினை நடைமுறைப்படுத்தும் பொருட்டு, மத்திய வங்கியிலுள்ள தமது உரிய கணக்குகளில் பேணப்படுகின்றன.

இலங்கை - பாகிஸ்தான்

இலங்கையும் பாகிஸ்தானும் 1984 இல் இருதரப்பு வர்த்தக உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன. இறுதி அமர்வானது (9ஆவது அமர்வு) வர்த்தக அமைச்சர்கள் மட்டத்தில் கொழும்பில் 2005 மே 12 -13 வரையில் கொழும்பில் நடாத்தப்பட்டது. 9 ஆவது அமர்வின் போது, உள்நாட்டு சட்ட நடைமுறைகளின் பூர்த்தியினை ஒவ்வொன்றும் மற்றையதுடன் உறுதிப்படுத்தும் இராஜதந்திர குறிப்புக்களினை பாகிஸ்தான்  - இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் அமுலாக்கலுக்காகப் பரிமாறிக் கொண்டன.

வர்த்தகம், வணிகம், முதலீடு, கைத்தொழில்கள், கடன் வசதிகள், ஆகாய மற்றும் கப்பல் சேவைகள், தொழில்நுட்ப உதவுகை மற்றும் சுற்றுலா போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்டன. இலங்கையானது பல்லைக்கழக் கல்வி, வர்த்தக வங்கி நடவடிக்கைகள், மத்திய வங்கி, புகையிரதப் போக்குவரத்து, தபால் மற்றும் தொலைத்தொடர்புகள் உள்ளடங்கலான பரந்துபட்ட துறைகளில் பாகிஸ்தானிடமிருந்தான தொழில்நுட்ப உதவுகையினைப் பெறக்கூடியதாக இருந்துள்ளது. எஸ்.ரி.சி பொது வர்த்தக கம்பனியினால் வர்த்தகப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கும் விலங்கு இனவிருத்தி மற்றும் சுகாதார திணைக்களம் ஆகியவற்றினால் மரபியல் பொருட்களின் இறக்குமதிக்காக 10 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியினைக் கொண்ட பாகிஸ்தானின் புதிய வரவு வரிசையொன்றினைப் பயன்படுத்துவதற்கான இலங்கையின் கோரிக்கையினையும் ஏற்றுக் கொண்டது. இரண்டு நாடுகளும் வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு, விமான சேவைகள், கப்பல் மற்றும் கப்பல் துறை  சேவைகள், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகள் தொடர்பில் ஒவ்வொன்றும் மற்றைய நாட்டுடன் ஒத்துழைப்பதற்கு உடன்பட்டுக் கொண்டன.

இலங்கை - எகிப்து

1954 வரையில் சுதந்திரமான நாணய முறையில் கொடுக்கல் வாங்கல்களில் இடம்பெற்ற இலங்கை - எகிப்துக்கிடையிலான வர்த்தகமானது, அந்த வருடத்திலிருந்து வர்த்தக மற்றும் கொடுப்பனவு கணக்கினூடாக நடாத்தப்பட்ட வர்த்தகத்தின் “பண்டமாற்று முறைமை” இதனூடாக இரண்ட நாடுகளுக்குமிடையில் ஆரம்பிக்கப்பட்டது. 70களின் நடப்பகுதி வரையிலும் இரண்டு நாடுகளினாலும் மேற்கொள்ளப்பட்டு வந்த பண்டமாற்று முறையானது 1977 இல் புதிய இரு தரப்பு வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் வரையில் நடைமுறையிலிருந்ததுடன் பண்டமாற்று முறையினை விடவும் மிகவும் சிறந்த முறையில் வர்த்தகத்தினை நடாத்துவதற்கான வசதியினையும் வழங்கியிருந்தது.

புதிய உடன்படிக்கையானது வர்த்தக பரிமாற்றங்களுக்கான தீர்வுகளின் ஊடகமாக நாணயத் தாள்களின் பயன்பாட்டினை வலியுறுத்தியிருந்தது. இரு தரப்பு உறவுகளினை மேலும் வலுப்படுத்தும் நோக்குடன், இலங்கையும் எகிப்தும் 1987 இல் எல்லை மற்றும் வித்துரைக்கப்பட்ட வர்த்தக பிரச்சனைகள் தொடர்பில் கூட்டு ஆணைக்குழு மற்றும் உப குழுக்களை தாபிப்பதற்கான வழிமுறையாக பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான உடன்படிக்கையான்றில் கைச்சாத்திட்டது. அதனைத் தொடர்ந்து, 1990 இல், “வர்த்தகம் மீதான கூட்டு ஆணைக்குழு” இன் முதலாவது அமர்வு இலங்கையில் நடாத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இரண்டு அரசாங்கங்களும் இரண்டு நாடுகளினதும் வர்த்தக அமைச்சர்களினால்  தலைமை தாங்கப்படும் கூட்டு ஆணைக்குழுவின் நிலைக்கேற்ப கூட்டு ஆணைக்குழுவினை தரமுயர்த்துவதற்கு உடன்பட்டுக் கொண்டன. அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டு ஆணைக் குழுவானது சிறப்பான ஒருங்கிணைப்பு மற்றும் ஒருங்கிணைந்த அணுகுமுறையினூடாக உயர்நதளவிலான சாத்தியமான பெறுபேற்றினை அடைவதற்கு எதிர்பார்க்கின்றது. அதற்கிணங்க, இலங்கை மற்றும்எகிப்பதுக்கிடையிலான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு மீதான புதிய கூட்டு ஆணைக்குழுவின் முதலாவது அமர்வு அமைச்சர்கள் மட்டத்தில் 1996 இல் கெய்ரோவில் நடாத்தப்பட்டது.

இலங்கை  - ரோமானியா

இலங்கை - ரோமானியா பொருளாதார ஒத்துழைப்புக்கான கூட்டு ஆணைக்குழுவின் 8 ஆவது அமர்வு 1991 டிசம்பரில் கொழும்பில் நடாத்தப்பட்டது. இக் கூட்டத்தில், இலங்கை அரசாங்கத்திற்கும் ரோமானிய அரசாங்கத்திற்குமிடையில் வர்த்தக, பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான வரைபு உடன்படிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டது. புதிய உடன்படிக்கையானது, 1975 ஆம் ஆண்டின் வர்த்தக உடன்படிக்கை மற்றும் 1968 ஆம் ஆண்டின் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கை என்பவற்றினை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டதாகும்.

வெளி விவகார அமைச்சு மற்றும் நிதி அமைச்சுக்கள் இந்த புதிய வரைபுக்கான தமது சம்மதத்தினைத் தெரிவித்துள்ளதுடன் அமைச்சரவை அங்கீகரமானது ஏற்கனவே பெறப்பட்டுள்ளது. வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான கூட்டு ஆணைக்குழுவின் இடம்பெறவுள்ள கூட்டத்தில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளது. இந்த உடன்படிக்கையானது புச்சாரெஸ்ரில் இலங்கை மற்றும் ரோமானியாவினால் பரஸ்பரம் உடன்பட்டு உரிய அமைச்சர்கிளனால் கைச்சாத்திடப்படவுள்ளது.

இலங்கை - ஈரான்

1962 இல் கைச்சாத்திடப்பட்ட ஈரான் மற்றும் இலங்கைக்கிடையிலான வர்த்தக மற்றும் கொடுப்பனவு உடன்படிக்கையானது இரத்துச் செய்யப்பட்டு அதற்குப்பதிலாக பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான உடன்படிக்கையில் 1987 இல் கைச்சாத்திட்டன. அதன் பின்னர் இரண்டு நாடுகளும் கூட்டு ஆணைக்குழுவின் நோக்கல்லையின் கீழ் இணைந்து செயற்பட்டன. 1997 வரையில் ஏழு கூட்டு ஆணைக்குழுக் கூட்டங்கள் நடாத்தப்பட்டுள்ளதுடன் அதன் எட்டவாது அமர்வு வர்த்தக அமைச்சர்கள் மட்டத்தில் 2006 மே 27 - 28 வரையில் ஈரான், தெஹிரானில் நடாத்தப்பட்டது.

2010 செப்ரெம்பர் 13 - 15 ஆம் திகதிகளில் நடாத்தப்பட்ட ஒன்பதாவது அமர்வின் போது, ஈரான் மற்றும் இலங்கை என்பன இரண்டு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக விரிவாக்கலுக்கலினைக் கருத்தில் கொண்டு, மிதமான நடவடிக்கைகளினூடாக தற்போதைய வர்த்தக முறையினை அங்கீகரித்துள்ளன.

இலங்கையின் பிரதான ஏற்றுமதிப் பொருளான தேயிலைக்கான ஏற்றுமதி அணுகுமுறையினைப் பாதுகாக்கும் நோக்குடன், இரண்டு தரப்புக்களும் இலங்கையிலிருந்து தேயிலை இறக்குமதிக்கான கோட்டா / தரிவு பங்கினைத் தாபிப்பது தொடர்பில் கலந்துரையாடலில் ஈடுபட்டன. இலங்கையானது இந்தக் கோட்டாவானது இலங்கையிலிருந்து முறபொதியிடப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுவதற்கு அனுமதிக்கத்தக்க அதன் பகுதியினையும் இலங்கையின் சந்தை நிலையினையும் பிரதிபலிப்பதாக அமைதல் வேண்டும். இது கூட்டு ஆணைக்குழுவொன்றினை ஆரம்பிப்பதற்கு முன்பாக, ஈரானுக்கான தேயிலை இறக்குமதியினை தடை செய்துள்ளமை குறித்து தெரிவிக்க வேண்டியது ஈரானிய வர்த்தக பிரதி அமைச்சர் என்ற வகையில் அவசியமானதாகும் எனத் தெரிவித்துள்ளார்.

இலங்கை  - தாய்லாந்து

இலங்கைக்கும் தாய்லாந்திற்குமிடையிலான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு மீதான உடன்படிக்கையானது, இலங்கையின் வெளி விவகார அமைச்சர் தாய்லாந்திற்கு விஜயம் மேற்கெண்ட போது 1996 ஜனவரியில் கைச்சாத்திடப்பட்டது. அதற்கிணங்க, இந்த ஒத்துழைப்பு உடன்படிக்கையின் கீழான முதலாவது கூட்டம் 2000 ஜூனில் பாங்கொக்கில் நடாத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் இரண்டு தரப்பும் இரண்டு நாடுகளுக்குமிடையிலான அரச வர்த்தக ஒத்துழைப்பு குறித்து மீளாய்வு செய்துள்ளதுடன் அதன் முழுமையான பயனைப் பெறுவதற்காக இரு தரப்பு வர்த்தகத்திளை மேலும் விரிவாக்குவது குறித்தும் கலந்துரையாடியுள்ளன.

இலங்கை - குவைத்

This page is under construction

இலங்கை  - ஈராக்

1975 இல் கைச்சாத்திடப்பட்ட இலங்கை மற்றும் ஈராக்கிற்கிடையிலான வர்த்தக உடன்படிக்கையானது பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான கூட்டு ஆணைக்குழு ஒன்றினைத் தாபிப்பதற்கு உதவியளித்துள்ளதுடன் அதன் முதலாவது அமர்வு 1979 மார்ச்சில் கொழும்பில் நடாத்தப்பட்டது.

2010 ஒக்டாபர் 21 - 22 வரையில் கொழும்பில் நடாத்தப்பட்ட, பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான இலங்கை - ஈராக் கூட்டு ஆணைக்குழுவின் 7 ஆவது அமர்வானது, ஒத்துழைப்பின் பல்வேறு விடயங்களினை ஆய்வு செய்வதற்கான குழுக்களின் தாபித்தலினை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

மூன்று குழுக்கள் ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ளன,

  • வர்த்தக மற்றும் நிதிசார் ஒத்துழைப்பு;
  • பொருளதார ஒத்துழைப்பு; 
  • விஞ்ஞான, கலாச்சார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு