தென்னாசிய சுதந்திர வர்த்தக பிரதேசம்

saftaதென்னாசிய சுதந்திர வர்த்தக பிரதேசம் (SAFTA) தொடர்பான உடன்படிக்கையானது பாகிஸ்தானின் இஸ்லாமபாத் நகரில் நடாத்தப்பட்ட 12 ஆவது சார்க் மாநாட்டின் போது 2004 ஜனவரியில் கைச்சாத்திடப்பட்டு 2006 ஜனவரி 01 இல் அமுலுக்கு வந்தது. SAFTA இன் உறுப்பு நாடுகளாக ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மாலைதீவு, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை என்பன இருந்து வருகின்றன.

2010 ஏப்பிரல் 29 ஆம் திகதியன்று பூட்டானில் நடாத்தப்பட்ட 16 ஆவது சார்க் மாநாட்டின் போது, உறுப்பு நாடுகள் / அரசாங்கங்களின் தலைவர்கள் சார்க் ஒத்துழைப்பினை மேலும் விரிவாக்குதல் தொடர்பில் கூடிய கவனம் செலுத்தியுள்ளதுடன் வர்த்தக ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய பொருளாதார ஒருங்கிணைப்பினை மேலும் விரிவாக்குதல் என்பனவற்றிற்கான புதிய புதிய வழிமுறைகளினைக் கண்டறிவதற்கான வழியாக, வர்த்தக சேவைகள் தொடர்பான சார்க் சட்டமுறையிலான உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டன.

ஆசிய - பசுபிக் வர்த்தக உடன்படிக்கை (APTA)

இந்த உடன்படிக்கையானது 1975 ஜூலையில் பாங்கொக் உடன்படிக்கையாக ஆரம்பிக்கப்பட்டதுடன் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்தில் பொருளாதார மற்றும் சமூக ஆணைக்குழுவிலுள்ள ஆசியாவின் மிகப்பழைய பிராந்திய முன்னுரிமை வர்த்தக உடன்படிக்கைகளில் ஒன்றாகவும் இருந்து வருகின்றது. இது 2005 நவம்பரில் ஆசிய பசுபிக் வர்த்தக உடன்படிக்கையாக (APTA) மீளப் பெயரிடப்பட்டுள்ளதுடன் 2006 செப்ரெம்பர் 01 இல் அமுலுக்கு வந்தது. APTA இன் உறுப்பு நாடுகளாக பங்களாதேஷ், சீனா, இந்தியா, லாவோஸ், கொரியக் குடியரசு மற்றும் இலங்கை என்பன உள்ளன.

APTA இன் பிரதான நோக்கம் ESCAP உறுப்பு நாடுகளுக்கிடையே வர்த்தக விரிவாக்கல் செயல்முறையினை தொடர்ச்சியாக முன்னெடுப்பதனூடாக பொருளாதார அபிவிருத்தியினை மேம்படுத்துவதுடன் அவற்றின் தற்போதைய மற்றும் எதிர்கால அபிவிருத்தி மற்றும் வர்த்தகத் தேவைகளினைக் கொண்டதும் பரஸ்பரம் நன்மையளிக்கக் கூடிய நடைமுறையொன்றினூடாக பொருளாதார ஒத்துழைப்பினை மேலும் விரிவாக்குவதேயாகும்.

Latest News

அனைத்து செய்திகளையும் பார்க்க