இந்திய - இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை (ISFTA)

1998 டிசம்பர் 28 ஆம் திகதியன்று கைச்சாத்திடப்பட்டு 2000 மார்ச் 1 ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வந்த இந்திய இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையானது இரண்டு நாடுகளுக்குமிடையில் மேற்கொள்ளப்படும் பரந்தளவிலான உற்பத்திப் பொருட்களுக்கு தீர்வை விலக்களிப்புச் சலுகைகளினை வழங்கி வருகின்றது. 2008 நவம்பரிலிருந்து அமுலுக்கு வந்த ISFTA இன் கீழான இலங்கையின் இறுதி தரிவு விடுதலை இணக்கப்பாடானது பூரணத்துவத்துடன் முழுமையாக அமுல்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இலங்கையானது 2003 மார்ச்சின் இறுதியிலிருந்து ISFTA இன் கீழான பாரிய இந்திய சந்தைக்கு முழுமையான தீர்வை விலக்களிப்பு அணுகுமுறையினை ஏற்கனவே பெற்றுள்ளது. இதனால், இலங்கையினைச் சேர்ந்த தொழில்முயற்சியாளர்களினால் தீர்வையற்ற அடிப்படையில் இந்திய சந்தைக்கு 4000 இற்கும் மேற்பட்ட உற்பத்தி வரிசைகளினை ஏற்றுமதி செய்ய முடிகின்றது.

சுங்கத் தீர்வையின்றி இந்திய சந்தைக்கான இலங்கையின் ஏற்றுமதிகள் 2009 ஆம் ஆண்டின் 7ம் மாதம் 164.51மில்லியன் அமெரிக்க டொலரிலிருந்து 2010 ஆம் ஆண்டு, 7ம் மாதம் 239.2 மில்லியன் அ.டொலருக்கு அதிகரித்திருந்ததுடன் 45.4%  அதிகரித்துள்ளது. இதனுள் மோட்டார் வாகனங்கள் மற்றும் பெற்றோலிய உற்பத்தி பொருட்கள் உள்ளடங்கலான இயந்திர உதிரிப்பாகங்கள், இயந்திரம் அல்லது உருக்கு மற்றும் அவற்றின் உற்பத்திப் பொருட்கள், மருந்தாக்கல் பொருட்கள், சீனி மற்றும் சீமெந்து என்பன உள்ளடங்குகின்றன. திணைக்களமானது சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் கீழான அமுலாக்கல் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு உள்நாட்டிலுள்ள அக்கறைதார்களுடனும் அவ்வாறே இந்தியாவிலுள்ள வர்த்தகப் பங்காளிகளுடனும் தொடர்ச்சியான பேச்சுவாரத்தைகளில் ஈடுபட்டு வருகின்றது.

ISFTAஇன் கீழான உற்பத்திப் பொருட்களின் பல்வகைப்படுத்தல்

மரக்கறி எண்ணெய், செப்பு, மாஜரின், மாபிள்கள் மற்றும் மிளகு மற்றும் ஏனைய உற்பத்திப் பொருட்களின் வகை போன்ற பாரிய ஏற்றுமதிகளில் குறைவு ஏற்பட்டுள்ள அதேவேளையில், இந்தியாவுக்கான சந்தை அணுகு முறையினைப் பெற்றுள்ளன. அவை காப்பிடப்பட்ட வயர்களும் கம்பிகளும், கோழி உணவுகள், காற்றழுத்த ரயர்கள், பிங்கான்கள், தைத்த ஆடைகள், தளபாடம், குளிரூட்டிகளும் குளிரூட்டும் இயந்திரங்களும், அளவிடல் மற்றும் நிறையிடல் உபகரணங்கள், கண்ணாடிப் போத்தல்கள், பதப்படுத்தப்பட்ட இறைச்சி உற்பத்திகள், நடுத்தரளவிலான அடர்த்தியினைக் கொண்ட நார்ப் பலகைகள் (MDF), இறப்பர் கையுறைகள், வெது வெதுப்பு கடதாசிகள், தரை ஒடுகள், கற்களும் மாபிள்களும், வெப்பமாக்கிகளும் இயந்திர உபகரணங்களும், இரும்பு மற்றும் உருக்கினாலான பொருட்கள், விசைப் பொறிப் பலகைகளும் மூடிகளும், சாக்குகளும் பைகளும் போன்றவற்றினை உள்ளடக்குகின்றன.

பாகிஸ்தான் - இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை (PSFTA)

இலங்கை மற்றும் பாகிஸ்தானினால் 2002 இல் கைச்சாத்திடப்பட்ட சுதந்திர வர்த்தக உடன்படிக்கையானது (PSFTA) 2005 ஜூன் 12 இலிருந்து  அமுலுக்கு வந்தது.

பாகிஸ்தான் ஆனது, இந்தியாவினால் தலைமை வகிக்கப்படும் சார்க் பிராந்தியத்தில் இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாக இருந்து வந்துள்ளது. பாகிஸ்தானுக்கான இலங்கையின் பிரதான ஏற்றுமதிகளினுள் மிளகு, மரக்கறி உற்பத்திகள், பீடி, இலைகள், வெற்றிலை, தேங்காய் சிரட்டைகள்,  இயற்கை இறப்பர், தெங்கு மற்றும் புத்தம் புதிய மற்றும் உலர்ந்த மரமுந்திரிகை பருப்புக்கள் என்பனவும் உள்ளடங்குகின்றன. PSFTA இன் அமுலாக்கலின் பின்னர் பாகிஸ்தானிய சந்தைக்கு புதிய உற்பத்திப் பொருட் தொகுதியொன்று ஊடுருவியுள்ளதுடன் அவை தைத்த ஆடைகள், MDF பலகைகள், பிஸ்கற்கள், புதிய அன்னாசி, விளையாட்டு பொருட்கள், புளி, உண்ணக்கூடிய எண்ணெய், பீங்கான் மேசைப் பொருட்களும் சமயலறைப் பொருட்களும், பீங்கான் தரை ஓடுகள், தளபாடம், மின்சார ஆளிகளும் சொக்கற்றுக்களும், மூலிகை அழகு சாதன பொருட்கள் மற்றும் பிளாஸ்ரிக் பொருட்கள், வர்ணங்கள், கண்ணாடி சித்திரங்கள், தோல் உற்பத்திப் பொருட்கள், குளிரூட்டப்பட்ட மீன், இறால் வகை, கணவாய், நண்டு, வெட்டுப் பூக்கள் மற்றும் இலைத் தொகுதி, இரத்தினக்கற்களும் ஆபரணங்களும் மற்றும் அலங்கார மீன் போன்றவற்றினை உள்ளடக்குகின்றன.

இலங்கையினைத் தளமாகக் கொண்டுள்ள தொழில்முயற்சியாளர்கள், சுங்கத் தீர்வையற்ற அடிப்படையில் பாகிஸ்தான் சந்தைக்கு 4500 இற்கும் மேற்பட்ட உற்பத்திப் பொருள் வரிசைகளினை தற்போது ஏற்றுமதி செய்ய முடியும்.

Latest News

அனைத்து செய்திகளையும் பார்க்க