உலக வர்த்தக அமைப்பு

இப் பிரிவின் பிரதான பொறுப்பு உலக வர்த்தக நிறுவனத்தில் (WTO) இலங்கையினைப் பிரதிநிதித்துவப் படுத்துவதேயாகும். உலக வர்த்தக நிறுவனமானது உலக வர்த்தக நிறுவனத்தின் சட்ட நடைமுறைகளுக்கமைவாக ஒவ்வொன்றும் மற்றையதுடன் வர்த்தகத்தினை நடத்துவதற்கான பொறுப்பினைக் கொண்டுள்ள 164 உறுப்பினர்களினைக் கொண்டுள்ள பல தரப்பு வர்த்தக நிறுவனமாகும். அதன் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் DoC ஆனது பொறுப்புடையதாக உள்ளது.

உலக வர்த்தக நிறுவனத்தின் தாபக உறுப்பினர் என்ற வகையிலும் அதன் ஆரம்பகால 23 தாபக உறுப்பினர்களில் ஒருவர் என்ற வகையிலும், தரிவு மற்றும்  வர்த்தகம் தொடர்பான பொது உடன்படிக்கையினை (GATT), இலங்கையானது வர்த்தக திணைக்களத்தினூடாக உலக வர்த்தக நிறுவனத்தில் மிகவும் காத்திரமான பங்களிப்புடன் செயற்படுத்தியுள்ளது. திணைக்களமானது உலக வர்த்தக நிறுவனத்தில் குறிப்பிட்ட காலப்பகுதிகளில் நடாத்தப்பட்ட பல்வேறு சுற்றுப் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் இலங்கையின் அக்கறைகள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதுடன் தற்போதிருக்கும் உடன்படிக்கைகளின் கீழ் இலங்கையின் உரிமைகள் மற்றும் கடப்பாடுகள் குறித்தும் பொறுப்பு வகிக்கின்றது.

பேச்சுவார்த்தைகளின் தற்போதைய சுற்றான டோஹா சுற்றுப் பேச்சுவார்த்தையானது, சந்தை அணுகுமுறை இணக்கப்பாடுகள் மற்றும் விவசாயத்துறையில் உள்நாட்டு ஆதரவு, கைத்தொழில் மற்றும் மீன்படி உற்பத்திகளுக்கான சந்தை அணுகுமுறை, சேவைகள், வர்த்தக வசதிப்படுத்தல், வர்த்தக நிவாரண நடவடிக்கைகள் தொடர்பான சட்ட விதிகள், பிராந்திய வரத்தக உடன்படிக்கைகள் மற்றும் பிணக்குத் தீர்வுப் பொறிமுறை, புலமைச் சொத்து வர்த்தகம், வர்த்தகம் மற்றும் சுற்றாடல் போன்றவை உள்ளடங்கலான பல்வேறு விடயங்கள் தொடர்பான அதிகாரத்தினைக் கொண்டுள்ளது. இலங்கையானது, இலங்கையின் பொருளாதாரம் சிறியதும் நலிவடைந்ததுமாக இருப்பதால் இலங்கைக்குத் தனித்துவமாகவிருக்கின்ற அனைத்து விடயங்களிலும் கூடிய அக்கறையினைக் கொண்டுள்ளது. இவை, அதன் பிரதான சந்தைகளுக்கான மேம்படுத்தப்பட்ட சந்தை அணுகுமுறை, அதன் உள்நாட்டு விவசாயத்தினைப் பாதுகாக்கும் பொருட்டு வினைத்திறன் வாய்ந்த நெகிழ்வுப் போக்குகளினை ஏற்படுத்துதல், மரபு ரீதியான அறிவு மற்றும் சுதேச உற்பத்திகளினைப் பாதுகாப்பது தொடர்பான தேவைப்பாடுகளின் உள்ளடக்கம், அவற்றிற்கிடையே ஒத்திசைவான வர்த்தக வசதிப்படுத்தல் சட்ட நடைமுறைகளினை தொழிற்படுத்துதல் என்பனவற்றினை உள்ளடக்குகின்றன.

வர்த்தக திணைக்களத்திலிருந்தான அலுவலர்களைக் கொண்ட நிரந்தர இலங்கைத் தூதுக்குழுவொன்றினூடாக ஜெனிவாவிலுள்ள உலக வர்த்தக நிறுவனத்தில் பிரதிநிதித்துவம் செய்யப்படுகின்றது. வர்த்தக திணைக்களமானது பேச்சுவார்த்தை முன்மொழிவுகளின் பகுப்பாய்வு, பேச்சுவார்த்தைகளின் அனைத்து விடயங்களிலும் இலங்கையின் நலன்கள் குறித்து அரச மற்றும் தனியார் அக்கறைதாரர்களுடன் ஆலோசனைகளினை நடாத்துதல் மற்றும் இலங்கைக்குச் சொந்தமான முன்மொழிவுகளினைத் தயாரித்தல் என்பனவற்றினூடாக மேற்படி விடயங்களில் இலங்கையின் சார்பில் பேச்சுவார்த்தை நடாத்தும் தகுதி நிலைகளினை வகுப்பதில் தற்போது ஈடுபட்டு வருகின்றது.

பேச்சுவார்த்தைகளின் தற்போதைய சுற்றுக்களில் இலங்கையின் நலன்கள் குறித்து கவனம் செலுத்துவதற்கு அப்பால், வர்த்தக திணைக்களமானது, உலக வர்த்தக இணக்கப்பாடுகளுடன் இலங்கையின் வர்த்தக  நடவடிக்கைகளின் ஒருமுகத் தன்மையினை ஆய்வு செய்தல், வர்த்தக கொள்கை விடயங்களினை வகுப்பதில் இலங்கைக்கு கிடைக்கக்கூடிய நெகிழ்வுத் தன்மைகள் குறித்து மதியுரை வழங்குதல், இலங்கையுடனான பிரதான வர்த்தகப் பங்காளி நாடுகளாக இருக்கின்ற உலக வர்த்தக நிறுவனத்தில் இணைந்துள்ள நாடுகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுதல், தேவையேற்படுமிடத்து ஏனைய உறுப்பு நாடுகளினைப் பிரதிநிதித்துவப்படுத்துதல், இலங்கையின் வர்த்தகத்தினைப் பாதிக்கின்ற ஏனைய உறுப்பு நாடுகளின் உலக வர்த்தக நிறுவனத்தின் ஒத்திசைவான நடவடிக்கைகள் தொடர்பில், தொழில்நுட்ப உதவுகையினை வழங்குதல் மற்றும் உலக வர்த்தக நிறுவன சட்டநடைமுறைகளின் கீழ் திறன் விருத்தியினைக் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்புக்கள்:  உள்ளடங்கலான இலங்கையின் தற்போதைய உரிமைகள் மற்றும் கடப்பாடுகள் தொடர்பான விடயங்களிலும் தற்போது ஈடுபட்டு வருகின்றது. வர்த்தகத் திணைக்களமானது உலக வர்த்தக நிறுவனத்தின் இரண்டாண்டிற்கு ஒருமுறை நடாத்தப்படும் அமைச்சர்கள் மட்டத்திலான மாநாட்டிலும் இலங்கையினைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபற்றுகின்றது.

உலகளாவிய வர்த்தக அமைப்பு பற்றிய மேலும் தகவல் WTO வலைத் தளத்தில் கிடைக்கிறது: www.wto.org

வர்த்தக முன்னுரிமைகளுக்கான பூகோள முறைமை (GSTP)

வர்த்தக முன்னுரிமைகளுக்கான பூகோள முறையானது (GSTP) வர்த்தகம் மற்றும் அபிவிருத்தி தொடர்பான ஐக்கிய நாடுகள் மாநாட்டின் (UNCTAD) கீழ் தெற்கு - தெற்கு பிராந்திய வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பினை அதிகரிக்கும் நோக்குடன், பேச்சுவார்த்தை நடாத்தப்படும் ஓர் தரிவு முன்னுரிமை செயல்திட்டமாகும். 43 நாடுகளினைக் கொண்டுள்ள வர்த்தக முன்னுரிமைகளின் பூகோள முறையானது (GSTP), ஐக்கிய நாடுகள் குழு 77 உடன் பல தசாப்பதங்களாக நடாத்தப்பட்ட கலந்துரையாடல்களின் பின்னர்1989 ஆம் ஆண்டு அமுலுக்கு வந்தது.

இலங்கையானது ஆசியா, ஆபிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கப் பிராந்தியங்களிலுள்ள பல்வேறு அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுடன் இரண்டு சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் வரிச் சலுகைகளினைப் பரிமாறியுள்ளதுடன் GSTP பங்குபற்றாளர்களுக்கிடையேயான சந்தை அணுகுமுறையினை மேலும் விரிவாக்குதனை நோக்காகக் கொண்ட மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் அதன் பங்குபற்றல் தொடர்பில் தற்போது ஆராய்ந்து வருகின்றது.

இலங்கையானது ஆசியா, ஆபிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கப் பிராந்தியங்களிலுள்ள பல்வேறு அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுடன் இரண்டு சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் வரிச் சலுகைகளினைப் பரிமாறியுள்ளதுடன் GSTP பங்குபற்றாளர்களுக்கிடையேயான சந்தை அணுகுமுறையினை மேலும் விரிவாக்குதனை நோக்காகக் கொண்ட மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் அதன் பங்குபற்றல் தொடர்பில் தற்போது ஆராய்ந்து வருகின்றது.

இந்தப் பிரிவானது சர்வதேச வர்த்தக நிலையம் (ITC), ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக பேரவை (ECOSOC), ஐக்கிய நாடுகள் பொதுக் கூட்டமைப்பு (UNGA) மற்றும் உலக புலமைச் சொத்து நிறுவனம் (WIPO) உள்ளடங்கலான ஏனைய பலதரப்பு மாநாடுகளில் பலதரப்பு வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்கான உள்ளீடுகளினையும் வழங்கி வருகின்றது. குறிப்பாக பல்தரப்பு மட்டத்தில் உறுதியான தீர்வுகள் அல்லது தீர்மானங்களை தொடர்பில் கவனம் செலுத்தப்படுகின்றது. மேலும், இலங்கையின் ஏற்றுமதி சூழலுடன் தொடர்புடைய மூலவள வரையறைகள், திறன் விருத்தி மற்றும் ஏனைய வர்த்தகம் தொடர்பான விடயங்களுக்குத் தீர்வு காணும் பொருட்டு ITC இன் உதவுகையுடனான கருத்திட்டங்களை கண்டறிவதற்கும் அவற்றினை செயற்படுத்துவதற்கும் ITC உடன் இப்பிரிவு இணைந்து பணியாற்றுகின்றது.

Latest News

அனைத்து செய்திகளையும் பார்க்க